தமிழ்நாட்டிலிருந்து எண்ணற்றத் தேர்வர்கள் மத்திய குடிமைப்பணிகள் தேர்வுகளை எழுதி வருகின்றனர். பிரதான தேர்வுகளில் வெற்றி பெறும் தேர்வர்கள் டெல்லி வந்து நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்கள், குறிப்பாக கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவர்கள், பிரதான தேர்வுகளில் வெற்றி பெற்றால் டெல்லிக்கு வந்து நேர்காணல்களிலும், வெற்றிப்பெறுவது அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி தங்குமிடம், உணவு, பயிற்சிக்கு தயாராகத் தேவையான அம்சங்கள் உள்ளிட்டவை அவர்களுக்குத் தடையை ஏற்படுத்தும் நிலை தொடர்கிறது. இந்தச் சூழலில், இத்தகைய சிக்கலைத் தீர்க்க, தமிழ்நாட்டிலிருந்து வரும் தேர்வர்களுக்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் வசதி, பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக டெல்லி தமிழ்நாடு இல்லம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “இந்தியக் குடிமைப்பணிகளுக்கான பிரதான தேர்வில் தேர்ச்சிப் பெற்று மத்திய தேர்வாணையத்தின் நேர்காணல் தேர்வுக்கு, அழைப்பு அனுப்பப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, ஆண்டுதோறும் தேர்வுக்காக டெல்லி வருகைதரும்போது, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சலுகைக் கட்டணத்தில் தங்கும் அறைகள் தமிழ்நாடு அரசினால் வழங்கப்படுகிறது.