சென்னை:தமிழகத்தில் உள்ள 169 அரசு கல்லூரிகளில், உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த வகையில், கடந்த 2019-ம் ஆண்டில் 2,331 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும் நேர்காணலை கல்லூரி கல்வி இயக்குனராகத்தை சேர்ந்தவர்கள் நடத்துவார்கள் என உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டிருந்தது. அந்தவகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி அனுபவம், நேர்காணல் தேர்வு மதிப்பெண்கள் தரவரிசை பட்டியல், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனங்கள் நடைபெற்று வந்தன.