குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நாளை (23.12.19) அன்று போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை மாநகரப் போக்குவரத்து ஊழியர்களுக்கு, கழக மேலாண் இயக்குநர் உத்தரவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், ' நம்முடைய மாநகரப் போக்குவரத்துக் கழகம் என்பது ஒரு அத்தியாவசியமானது. இது, மக்கள் சேவையாற்றும் நிறுவனம் என்பதும் பொதுமக்கள் சேவைக்காக செயல்படும் நிறுவனம் என்பதும் நம் ஊழியர்கள் அனைவரும் அறிந்ததே. எனவே, தொழிலாளர்கள் அனைவரும் வருகின்ற 23ஆம் தேதி தவறாமல் பணிக்கு வர வேண்டும்.
மேலும், 23ஆம் தேதி ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினத்தில் வழங்கப்பட்டுள்ள சி ஆப், பணி ஓய்வு ஆகியவற்றில் உள்ளவர்களும் கட்டாயமாக பணிக்கு வர வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குமரியில் இயங்கும் மினி பேருந்துகளில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சோதனை