தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்து இயக்கும்போது மாரடைப்பு: பரிதாபமாக உயிரிழந்த ஓட்டுநர்! - cardiac attack bus driver chennai

சென்னை: வேளச்சேரியில் பேருந்து ஒட்டிச் சென்றுகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அரசுப் பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

bus file photo

By

Published : Oct 6, 2019, 3:42 PM IST

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் கே.கே.நகர் பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தவர் ராஜேஷ் கண்ணன் (31). இவர் நேற்றைய தினம் (5.10.2019) சிறுசேரி முதல் கேளம்பாக்கம் வரையிலான வழித்தடத்தில் இயங்கக்கூடிய (வழித்தட எண். 570) பேருந்தை இயக்கிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரின் உடல் உடனடியாக 108 அவசர ஊர்தியில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறப்பு உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

மாரடைப்பால் உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் ராஜேஷ் உடல்

மறைந்த ராஜேஷ்கண்ணன் உடலுக்கு போக்குவரத்துத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, ராஜேஷின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

போக்குவரத்துத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ராஜேஷ் உடலுக்கு மரியாதை

உயிரிழந்த ராஜேஷ் கண்ணன் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருடைய உடலை சொந்த ஊருக்கு அரசின் சார்பில் இலவசமாக எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், இறுதி சடங்குகள் செலவிற்காக உடனடி நிவாரண உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details