தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடரும் வடகிழக்குப் பருவமழை - 10 ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம் - அரசாணை வெளியீடு - தமிழக அரசு

வடகிழக்குப் பருவமழை பணிகளை ஒருங்கிணைக்க 10 ஐஏஎஸ் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

ஆணை
ஆணை

By

Published : Nov 10, 2021, 8:00 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் 11 மாவட்டங்களுக்கு நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அலுவலர்களை நியமித்து இன்று (நவ.10) தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

முன்னதாக மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில் மேலும் 11 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆணை

11 மாவட்டங்களுக்கு 10 ஐஏஎஸ் அலுவலர்கள்

  • விருதுநகர் - காமராஜர்
  • அரியலூர், பெரம்பலூர் - அனில் மேஷ்ராம்
  • நாகப்பட்டினம் - பாஸ்கரன்
  • திருவள்ளூர் - அனந்தகுமார்
  • மதுரை - வெங்கடேஷ்
  • கடலூர் - அருண் ராய்
  • ராணிப்பேட்டை- செல்வராஜ்
  • வேலூர் - நந்தகுமார்
  • ஈரோடு - பிரபாகர்
  • திருச்சி - ஜெயகந்தன்

வடகிழக்குப் பருவமழை பணிகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அலுவலர்களை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதையும் படிங்க: விரைவில் கோயில்களில் பாதுகாப்புப்பணிக்காக 10 ஆயிரம் பணியாளர்கள் நியமனம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

ABOUT THE AUTHOR

...view details