தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்திரிகையாளர் நலவாரியக் குழு - தலைவர், உறுப்பினர்களை நியமித்து அரசாணை வெளியீடு - தமிழ்நாடு அரசு ஆணை

பத்திரிகையாளர் நலவாரியக் குழு ஒன்றை அமைத்து அதற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அரசாணை வெளியீடு
அரசாணை வெளியீடு

By

Published : Feb 24, 2022, 6:17 PM IST

சென்னை:இதுகுறித்தான அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது,'செய்தித்துறை அமைச்சர், 2021-22ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், 6.9.2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில் "தமிழ்நாட்டில் முதன்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துப் பெருமை சேர்த்துள்ளார்.

அதனடிப்படையில் உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் ‘பத்திரிகையாளர் நலவாரியம்’ அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் 'பத்திரிகையாளர் நலவாரியம்' ஒன்றை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது.

அதில், 'பத்திரிகையாளர் நலவாரியத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, பயனாளிகளைத் தேர்வு செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு, பத்திரிகையாளர் நலவாரியக் குழு ஒன்றை அமைத்து அதற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை பின்வருமாறு நியமித்து அரசு ஆணையிடுகிறது.

அலுவல்சார் உறுப்பினர்கள்

1. கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை (அ) அவரால் நியமனம் செய்யப்படும் அலுவலர்

2. முதன்மைச் செயலாளர், வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை (அ) அவரால் நியமனம் செய்யப்படும் அலுவலர்

3. முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை (அ) அவரால் நியமனம் செய்யப்படும் அலுவலர்

4. செயலாளர், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை (அ) அவரால் நியமனம் செய்யப்படும் அலுவலர்

5. ஆணையர், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை (அ) அவரால் நியமனம் செய்யப்படும் அலுவலர்

6. ஆணையர், நில நிர்வாகத் துறை (அ) அவரால் நியமனம் செய்யப்படும் அலுவலர்

7. இயக்குநர் / துணைச் செயலாளர்.

செய்தி மக்கள் தொடர்புத் துறை

அலுவல்சாரா உறுப்பினர்கள்

1. சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிரமணியன், தினத்தந்தி குழுமம்

2. ஆர்.எம்.ஆர்.ரமேஷ் , ஆசிரியர், தினகரன் நாளிதழ்

3. பி.கோலப்பன், துணை ஆசிரியர், தி இந்து நாளிதழ்

4. எஸ் . கவாஸ்கர், செய்தியாளர், தீக்கதிர் நாளிதழ்

5. எம்.ரமேஷ் , சிறப்பு நிருபர் , புதிய தலைமுறை தொலைக்காட்சி

6. லெட்சுமி சுப்பிரமணியன், சென்னை, முதன்மை சிறப்பு நிருபர், ' தி வீக் ' செய்தி வார இதழ் .

குழுவின் பணி

பத்திரிகையாளர் ஓய்வூதியப் பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதுடன், பத்திரிகையாளர் நலவாரிய புதிய நல உதவித் திட்டங்களுக்கு அமைக்கப்படும் மேற்காணும் குழுவே பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் குறித்த மனுக்களையும் பரிசீலிக்கும்' என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பாஜக தனித்து போட்டியிட்டதால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது - டாக்டர் சரவணன்

ABOUT THE AUTHOR

...view details