சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபீர் புரஸ்கார்” விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபீர் புரஸ்கார்” விருது, ஒவ்வொரு ஆண்டும், முதலமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக அவர்களின் சமுதாய நல்லிணக்க செயல் அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில்) இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர்.
இவ்விருதானது, ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல், மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.