மாநகராட்சி ஆகிறது தாம்பரம் - தாம்பரம்
14:22 August 24
சென்னை: தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட இருக்கிறது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்துவருகிறது. அதன்படி இன்று, ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
அப்போது, சென்னை அருகே இருக்கும் தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியானது.
தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் நகராட்சிகளை இணைத்து தமிழ்நாட்டின் 16ஆவது மாநகராட்சியாக உருவாக்கப்படுகிறது. மேலும், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய ஊர்களும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட இருக்கிறது.