இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா வைரசால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள இடங்களைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பணிபுரியும் பணியாட்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றியும் பணியாளர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஏற்படுத்தியும் தர வேண்டும்.
மே 3ஆம் தேதிக்கு பின் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம்? - அரசாணை வெளியீடு
சென்னை: மே 3ஆம் தேதிக்கு பின்னர் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
செயலகம்
தமிழ்நாட்டில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம்:
- மே 3ஆம் தேதிக்குப் பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்.
- 100 நாள் வேலைத்திட்டம்.
- கிராமப்புற பகுதிகளில் நீர்நிலைகளை தூர்வாருதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி.
- நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, சாலை, பாலங்கள், செங்கல் சூளை பணிகளை மேற்கொள்ள அனுமதி.
- மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் கட்டுமானம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம்.
- குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதி.