தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை: வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்தினைப் பெற தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Cm palanisamy
அண்ணா விருது

By

Published : Oct 24, 2020, 10:46 PM IST

வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "வீர, தீரச் செயல்களுக்கான 'அண்ணா பதக்கம்' ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது.

இதில், 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், தகுதியுரை ஆகியவை அடங்கும். வீர, தீரச் செயல்புரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.

2021ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள பதக்கத்திற்குத் தகுதியானவர்களைத் தேர்வுசெய்வதற்கான விண்ணப்பங்கள் (Applications) வீர, தீரச் செயல்கள், அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ அல்லது அரசு முதன்மைச் செயலர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு டிசம்பர் 14ஆம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வுசெய்யப்பட்டு முதலமைச்சரால் வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details