தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வார இறுதி நாட்களில் கோயில்கள் திறக்க அரசு அனுமதி - அண்ணாமலை வரவேற்பு - temples open

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பாஜக அண்ணாமலை
பாஜக அண்ணாமலை

By

Published : Oct 14, 2021, 5:28 PM IST

சென்னை:கரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களை திறக்க அரசு அனுமதியளிக்கவில்லை. இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அனைத்து நாள்களிலும் கோயில்களைத் திறக்க வலியுறுத்தி கடந்த 7ஆம் தேதி சென்னை பாரிமுனையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திரையரங்குகள், டாஸ்மாக் கடைகளை திறந்தால் வராத கரோனா, கோயில்களை திறந்தால் வரும் என்பது கேலிக்கூத்து. கோயில்களை வைத்து அரசியல் செய்வது திமுகவுக்கு ஒன்றும் புதிதல்ல. கோயில் திறப்பு விவகாரத்தில் பத்து நாள்களுக்குள் நல்ல முடிவை எடுக்காவிட்டால், மக்களைக் கூட்டி அரசை ஸ்தம்பிக்க வைப்போம் என்று பேசியிருந்தார்.

மேலும் விஜயதசமி விழா வெள்ளிகிழமை நாளை (அக்.15) வருவதால் கோயில் திறக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து இன்று (அக்.14) வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். இதனை தான் பாஜக வலியுறுத்தியது. இதற்காக போராட்டங்களையும் நடத்தியது.

முதலமைச்சர் ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு எனது வாழ்த்துகளும், நன்றியையும் தெரிவித்து கொள்கின்றோம் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 23 மீனவர்கள் கைது விவகாரம்: தேவை நிரத்தர தீர்வு - மருத்துவர் ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details