தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைக்காரர்களுக்கு, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்திவாசிய பொருட்கள் ஏப்ரல், மே மாதங்களில் வழங்கப்பட்டன. இதேபோல் ஜுன் மாதமும் இலவச பொருட்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருள்கள் எப்போது? - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருள்கள்
சென்னை: ஏப்ரல், மே மாதங்கள் போல் ஜூன் மாதத்திற்கும் இலவச பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று ஜுன் மாதத்திற்கான இலவச பொருட்கள் வழங்க ரூபாய் 214 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதில், “கரோனா ஊரடங்கால் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் வேலையின்றி மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றன.
இதன் காரணமாக தமிழகத்தில் மக்கள் பசியால் யாரும் இருக்கக் கூடாது என்பதற்காக இலவசமாக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்திவாசிய பொருட்கள் ஏப்ரல், மே மாதங்களில் வழங்கப்பட்டன. இதேபோல் ஜுன் மாதமும் இலவச பொருட்கள் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.