இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு குறித்த, அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கான இன்று (மே 23) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை தெரிவித்து இருந்தனர்.
இக்கூட்டத்தில் மாநில அளவில் நடைபெறும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் குறித்தும், மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், கரோனா நோய்த் தொற்று பரவி வரும் இக்காலகட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடத்தும் முறைகள் குறித்து தமிழ்நாடு அரசின் கருத்துகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் எடுத்துரைத்தார். தமிழ்நாடு அரசின் இறுதி நிலைப்பாட்டை முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து ஒன்றிய அரசிற்கு தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.