வழக்கறிஞர்களின் நலன் கருதி, மறைந்த வழக்கறிஞர்களின் வாரிசுகளுக்கு நல உதவி வழங்கிடும் திட்டத்தை முதன்முதலில் 1987ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தொடக்கி வைத்தார். இத்திட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த நிதி உதவித்தொகையை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5.25 லட்சமாக உயர்த்தி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2012ஆம் ஆண்டு வழங்கினார். இதைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த நிதியை ரூ. 7 லட்சமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உறுதி செய்வது சட்டம். இப்படிப்பட்ட சட்டத்தை நிலைநாட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் வழக்கறிஞர்கள். சட்டப்படிப்பை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழும தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.