ஒரு லட்சத்து மூவாயிரத்து 150 மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். பொறியியல் படிப்பில் 95 மாணவர்களுக்கு கட்ஆப் மதிப்பெண், பிறந்த தேதி உள்ளிட்டவை ஒரே மாதிரியாக உள்ளதால், ரேண்டம் எண் பயன்படுத்தப்பட உள்ளது. அதிகபட்சமாக இந்த ஆண்டு, 95 மாணவர்களுக்கு ரேண்டம் எண் உபயோகப்படுத்தப்படுகிறது.
பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
சென்னை: பி.இ, பி.டெக். பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
அமைச்சர் அன்பழகன்
மேலும், 95 மாணவர்களின் மதிப்பெண்கள், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்திலும் ஒரே நிலையில் வருவதால், ரேண்டம் எண் உபயோகப்படுத்தப்படும். ரேண்டம் எண்ணில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், கலந்தாய்வுக்கு முதலில் அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் 20,30 மாணவர்களுக்குத்தான் 'சமப்பகிர்வு' வரும். ஆனால் இந்த ஆண்டு அதிகபட்சமாக 95 மாணவர்களுக்கு, 'சமப்பகிர்வு' வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.