தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயிரம் விளக்கு, சைதையில் தலா 1 கோடி ரூபாயைத் தாண்டும் சிக்கிய பொருள்களின் மதிப்பு! - Election flying squad

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், குறிப்பிட்ட சில தொகுதிகளில் பறிமுதல்செய்யப்பட்ட பொருள்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

TN Election
தமிழ்நாட்டில் தேர்தல்

By

Published : Apr 4, 2021, 12:26 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் ஓரிரு நாள்களில் நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலையுடன் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை முடிவடைகிறது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், குறிப்பிட்ட சில தொகுதிகளில் பறிமுதல்செய்யப்பட்ட பொருள்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

  • பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் 12 லட்சத்து 65 ரூபாயும், 330 மதுபான பாட்டில்களும் பறிமுதல்
  • லால்குடியில் 1,412 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
  • தென்காசியில் ஆறு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
  • ராணிப்பேட்டையில் 91 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
  • மானாமதுரையில் மூன்று லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
  • காஞ்சிபுரத்தில் பணம், வாக்காளர்களின் பெயர் பட்டியலுடன் சுற்றிய நால்வர் கைது
  • சங்கராபுரத்தில் பரப்புரைக்கு அனுமதி வாங்காமல், துண்டுப் பிரதிகளைக் கொண்ட வாகனம் பறிமுதல்
  • திருச்சியில் மூன்று லட்சத்து ஏழாயிரம் ரூபாய் பறிமுதல்
  • கொளத்தூரில் 85 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
  • சிவகாசியில் 45 லட்சம் ரூபாய் பறிமுதல்
  • தூத்துக்குடியில் 312 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
  • விருத்தாசலத்தில் 13 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
  • கள்ளக்குறிச்சியில் 7600 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
  • எடப்பாடியில் 992 புடவைகள் பறிமுதல்
  • பாளையங்கோட்டையில் 12 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
  • மேட்டூரில் 8000 மஃப்லர்களும், இரண்டு லட்சம் ரூபாயும் பறிமுதல்
  • செய்யூரில் 2,051 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
  • சென்னை சைதாப்பேட்டையில் 1.3 கோடி ரூபாய் பறிமுதல்
  • கடலூர் குறிஞ்சிப்பாடியில் 11 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பறிமுதல்
  • கோயம்புத்தூரில் 98 லட்சம் ரூபாய் பறிமுதல்
  • வேலூரில் ஒரு கோடியே ஆறு லட்சம் ரூபாய் பறிமுதல்
  • சேலம் வீரபாண்டியில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பறிமுதல்
  • சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் ஒரு கோடியே 23 லட்சம் ரூபாய் பறிமுதல்

இதையும் படிங்க:தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கமல் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details