தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய மற்றொரு வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க! - TN Election Commission said the Special Camps

Voter New Enrollment: தமிழ்நாட்டில் வாக்களர் பட்டியலை திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நவம்பர் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 8:24 PM IST

சென்னை:தமிழகம் முழுவதும் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக வரைவு வாக்காளா் பட்டியலை 2023, அக்.27-ல் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டார். மேலும் தமிழகம் முழுவதும் தேர்தலையொட்டி, சிறப்பு முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்கு படிவங்களை டிசம்பர் 9ஆம் தேதிக்குள் அளிக்கலாம் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து அவர் இன்று (நவ.3) வெளியிட்ட அறிக்கையில், இந்தியத் தேர்தல் ஆணையம் 2024 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2024 அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் அக்டோபர் 25ஆம் தேதி நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, அக்டோபர் 27ஆம் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் ஆண் வாக்களர்கள் 3 கோடியே 68 ஆயிரத்து 610 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 571 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 8 ஆயிரத்து 16 பேர் என மொத்தமாக, 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 பேர் உள்ளனர். மேலும், வாக்களர் பட்டியல் திருத்தம் நடைபெறும் பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 15 ஆயிரத்து 187 பேர் உட்பட பெயர் திருத்தம், முகவரி மாற்றம், நீக்கம் ஆகியவற்றிக்கு 36 ஆயிரத்து 142 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் சனி, ஞாயிற்றுக்கிழமையில் (நவம்பர் 4, 5) 31 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாம் நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு திருத்தங்கள் மற்றும் பிறவற்றை அடையாளம் காண்பதற்கு அரசியல் கட்சியினர் உதவி செய்யலாம்.

வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பற்றி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு இந்திய தேர்தல்ஆணையத்தின் நிர்ணயிக்கப்பட்ட படிவங்களில் தகவல் வழங்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை அக்டோபர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரையில் மேற்கொள்ளலாம். 2024 ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது' என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தெலங்கானா அரசியலில் திடீர் திருப்பம்.. காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த ஒய்.எஸ்.ஷர்மிளா..!

ABOUT THE AUTHOR

...view details