தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு - press release

சென்னை: சொந்த மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் காவல்துறையினரை வேறு இடத்திற்கு மாற்ற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

state election commission

By

Published : Sep 28, 2019, 9:05 PM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நவம்பர் மாத இறுதிக்குள் நடக்கவுள்ளது. இதற்காக மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்கு சீட்டுகளை அச்சிடுதல் ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சொந்த ஊர், உள்ளாட்சி பகுதிகளில் அல்லது சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அரசு அலுவலர் மற்றும் காவல் அலுவலர்களை வேறு இடத்துக்கு பணியிட மாற்ற செய்ய வேண்டும்.

ஒரே மாவட்டத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் அல்லது வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மூன்று வருடம் நிறைவு பெறும் அலுவலர்களையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். ஐஜி, டிஐஜி, எஸ்பி, காவல்ஆய்வாளர், உதவி காவல்ஆய்வாளர் நிலையிலான காவல் அலுவலர்களையும் பணிமாற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் அலுவலர்கள், நியமன அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், நோடல் அலுவலர்கள் மற்றும் இன்ன பிற தேர்தல் நடத்தும் பணியில் இருப்பவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. கணினி வேலைகள், சிறப்பு பிரிவு அலுவலர்கள், பயிற்சி பிரிவில் இருக்கும் காவல் அலுவலர்களுக்கு இது பொருந்தாது எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details