தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் அதிரடி பணியிட மாற்றம்! - EDUCATION DIRECTORS TRANSFERS

சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து வந்த மூன்று இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

TN EDUCATION BOARD DIRECTORS TRANSFERS

By

Published : Sep 19, 2019, 7:38 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையிலும், அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையிலும் பள்ளிக் கல்வித் துறையில் இயக்குநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பின்படி,

  • மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநராக பணியாற்றிவந்த ராமேஸ்வரம் முருகன், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி வந்த இயக்குநர் கருப்பசாமி மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகத்தில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக பணியாற்றி வந்த சேதுராம வர்மா தொடக்கக் கல்வித் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details