இரண்டு தேர்தல்களிலும் கையில் மை வைக்கப்படுமா? - சத்யபிரதா சாஹூ விளக்கம் - TN EC ceo explains on voting
சென்னை: மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் வழக்கம்போல மை வைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஒரே நேரத்தில் வாக்குச் சாவடியில் விரல் மை வைப்பதில் பல்வேறு குழப்பம் மக்களிடையே உள்ளது. இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அப்போது வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு வழக்கம்போல் ஆள்காட்டி விரலிலும், பின்னர் மே 19ஆம் தேதி நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் நடுவிரலில் மை வைக்கப்படும்", என்றார்.