தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்' - TN DPH guidelines for Foreign travelers Isolation should be 14 days, even after 2 dose OF Corona vaccine

அமெரிக்கா, சிங்கப்பூர், பிரேசில் போன்ற நாடுகளிலிருந்து தமிழ்நாடு வரும் நபர்கள் கரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தி இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்

By

Published : Nov 25, 2021, 6:29 AM IST

சென்னை: மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வருவோர் 2 தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கரோனா பரிசோதனையைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரேசில், மொரீசியஸ், ஜிம்பாப்வே போன்ற நாடுகளிலிருந்து தமிழ்நாடு வரும் நபர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும், கரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தி இருந்தாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தாலும், 14 நாட்கள் தனிமை
மேலும், ஒரு டோஸ் செலுத்தி இருந்தாலும், 72 மணி நேரத்திற்குள் கரோனா பரிசோதனைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எட்டாம் நாள் மீண்டும் பரிசோதனை செய்த பின்னர் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானால், மீண்டும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்தியிருந்தாலும், தடுப்பூசி செலுத்தாவிட்டாலும் 72 மணி நேரத்திற்கு முன்பு கரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ் இருக்க வேண்டும் என்றும், அதில் கரோனா நெகட்டிவ் என்று இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்" என்றும் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details