தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட வாரியாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு! - Coronavirus positive case

சென்னை: மாவட்ட வாரியாக எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

TN District wise Coronavirus positive case
TN District wise Coronavirus positive case

By

Published : Apr 15, 2020, 1:22 AM IST

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 93 ஆயிரத்து 941 பேர் நேற்று வரை வீட்டில் 28 நாள்கள் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களில் 28 நாள்கள் தொடர் கண்காணிப்பினை இன்று 68 ஆயிரத்து 519 பேர் முடித்துள்ளனர். தற்போது 38 ஆயிரத்து 139 பேர் மட்டும் 28 நாள்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 81 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே இடத்தில் கலந்து கொண்டவர்களிடமிருந்து கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் நேற்று வரை ஆயிரத்து 58 பேருக்கும், இன்று 21 பேருக்கும் என ஆயிரத்து 79 பேருக்கு உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகளில் சென்னை மாவட்டத்தில் 5 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் ஒருவருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 9 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருவருக்கும், மதுரை மாவட்டத்தில் இரண்டு பேருக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டு பேருக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு பேருக்கும், சேலம் மாவட்டத்தில் ஒருவருக்கும், சிவகங்கை மாவட்டத்தில் ஒருவருக்கும், தென்காசி மாவட்டத்தில் மூன்று பேருக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா தொற்று உறுதியாகியுள்ள 34 மாவட்டங்களின் நிலவரம்

  • சென்னை : 212
  • கோயம்புத்தூர் : 126
  • திருப்பூர் : 79
  • திண்டுக்கல் : 65
  • ஈரோடு : 64
  • திருநெல்வேலி : 56
  • செங்கல்பட்டு : 46
  • நாமக்கல் : 45
  • திருச்சிராப்பள்ளி : 43
  • கரூர் : 41
  • மதுரை : 41
  • தேனி : 40
  • ராணிப்பேட்டை : 39
  • திருவள்ளூர் : 33
  • நாகப்பட்டினம் : 31
  • தூத்துக்குடி : 26
  • விழுப்புரம் : 23
  • கடலூர் : 20
  • சேலம் : 19
  • விருதுநகர் : 17
  • திருப்பத்தூர் : 17
  • கன்னியாகுமரி : 16
  • தஞ்சாவூர் : 16
  • வேலூர் : 15
  • திருவாரூர் : 15
  • திருவண்ணாமலை : 12
  • சிவகங்கை : 11
  • நீலகிரி : 9
  • காஞ்சிபுரம் : 8
  • தென்காசி : 8
  • ராமநாதபுரம் : 7
  • கள்ளக்குறிச்சி : 3
  • அரியலூர் : 1
  • பெரம்பலூர் : 1 எனப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details