தமிழ்நாட்டில் மேலும் 867 பேருக்கு கரோனா! - கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 16) புதிதாக 867 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
Covid -19
By
Published : Mar 16, 2021, 10:10 PM IST
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (மார்ச் 16) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 64 ஆயிரத்து ஆறு நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த 864 நபர்களுக்கும், மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவருக்கும் என 867 நபர்களுக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்து 94 ஆயிரத்து 766 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் எட்டு லட்சத்து 61 ஆயிரத்து 429 நபர்கள் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரியவந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் ஐந்தாயிரத்து 450 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து இன்று (மார்ச் 16) 561 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சத்து 43 ஆயிரத்து 423 என உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் நான்கு பேரும் தனியார் மருத்துவமனையில் ஒருவர் என இன்று ஐந்து பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 556 என உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் புதிதாக 352 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 86 நபர்களுக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 81 நபர்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 55 நபர்களுக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 51 நபர்களுக்கும் என கரோனா தீநுண்மி தொற்று அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 2,135 பேரும், செங்கல்பட்டில் 454 பேரும், கோயம்புத்தூரில் 448 பேரும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மாவட்ட வாரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை