தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 5,709; உயிரிழப்பு - 121 - மக்கள் நல்வாழ்வு துறை

TN Corona status today
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை விவரம்

By

Published : Aug 18, 2020, 6:12 PM IST

Updated : Aug 18, 2020, 10:13 PM IST

18:09 August 18

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 5 ஆயிரத்து 709 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 121 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர் என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் புதிதாக 65 ஆயிரத்து 75 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டில் இருந்து 5 ஆயிரத்து 698 நபர்களுக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு திரும்பிய 11 நபர்களுக்கும் என, மொத்தம் 5 ஆயிரத்து 709 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாக இன்று (ஆக.18) கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இன்று (ஆகஸ்ட்.18) வரை 37 லட்சத்து 12 ஆயிரத்து 657 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 654 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனா வைரஸ் தொற்று கண்டறிப்பட்டவர்களிள் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில், 53 ஆயிரத்து 860 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 ஆயிரத்து 850 பேர் குணம் அடைந்து, இன்று ஒரே நாளில் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் மாநிலம் முழுவதும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 89 ஆயிரத்து 787 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி, 121 பேர் இன்று இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 7ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில், கடந்த 4 நாட்களாக மீண்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விவரம் பின்வருமாறு:

சென்னை - 1,19,059

செங்கல்பட்டு - 21,499

திருவள்ளூர் - 20,618

காஞ்சிபுரம் - 14,296

மதுரை - 12,955

விருதுநகர் - 11,455

தூத்துக்குடி - 10,108

தேனி - 10,484

கோயம்புத்தூர் - 9,758

திருவண்ணாமலை - 8,922

வேலூர் - 8,641

ராணிப்பேட்டை - 8,647

திருநெல்வேலி - 7,743

கன்னியாகுமரி - 7,846

கடலூர் - 7,332

சேலம் - 6,471

திருச்சிராப்பள்ளி - 6,113

விழுப்புரம் மாவட்டம் - 5,504

கள்ளக்குறிச்சி - 5,039

தஞ்சாவூர் - 5,130

திண்டுக்கல் - 5,063

புதுக்கோட்டை - 4,449

ராமநாதபுரம் - 4,113 

தென்காசி - 4,146

சிவகங்கை - 3,478

திருவாரூர்  - 2,431

திருப்பத்தூர் - 2,159

அரியலூர் - 1,941

கிருஷ்ணகிரி - 1,688

நாகப்பட்டினம் - 1,650

திருப்பூர் - 1,647

ஈரோடு - 1,640

நாமக்கல் - 1,326

நீலகிரி - 1,089

கரூர் - 1,094

தருமபுரி - 1,046

பெரம்பலூர் - 1,010

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 884

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்  - 752

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரோனா!

Last Updated : Aug 18, 2020, 10:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details