இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் 41 அரசு, 27 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. அவற்றில் 12,275 நபர்களுக்கு சளி, ரத்தப் பரிசோதனை மேற்கொண்டதில் 765 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் தமிழ்நாட்டில் இருந்த 718 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 44 பேருக்கும், துபாய், ஃபிலிப்பைன்ஸ், லண்டன் ஆகிய நாடுகளிலிருந்து வந்த தலா ஒருவருக்கும் நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 16,227 நபர்களில், தற்போது மருத்துவமனைகளில் 7,839 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 833 பேர் பூரண குணம் அடைந்ததால் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8,324 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றவர்களில் பலனின்றி இன்று 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 111ஆக உயர்ந்துள்ளது.