தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 5, 2020, 6:21 PM IST

Updated : Oct 5, 2020, 9:15 PM IST

ETV Bharat / state

கரோனா நிலவரம் இன்று: 5,395 பாதிப்பு, 62 இறப்பு!

TN corona status today
கரோனா பாதிப்பு நிலவரம்

17:59 October 05

சென்னை: தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக 5 ஆயிரத்து 395 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மெத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்து 391ஆக உயர்ந்துள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அக்டோபர் 5ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டில் புதிதாக 80 ஆயிரத்து 868 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்து 5 ஆயிரத்து 388, மேற்கு வங்காளம், கர்நாடகா மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு வந்த தலா இரண்டு நபர்கள், ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய தலா ஒருவர் என 5 ஆயிரத்து 395 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

இதுவரை மாநிலம் முழுவதும் 75 லட்சத்து 52 ஆயிரத்து 282 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 லட்சத்து 25 ஆயிரத்து 391 நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தி மையங்களில் 45 ஆயிரத்து 881 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்து 5 ஆயிரத்து 572 நபர்கள் வீட்டுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 664ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 62 நபர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 846ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு நிலவரம்:

சென்னை - 1,74,143

செங்கல்பட்டு - 37,494

திருவள்ளூர் - 33,501

கோயம்புத்தூர் - 34,558

காஞ்சிபுரம் - 22,691

கடலூர் - 20,869

சேலம் - 21,386

மதுரை - 16,970

திருவண்ணாமலை - 15,981

தேனி - 15,236

வேலூர் - 15,480

விருதுநகர் - 14,618

தூத்துக்குடி - 13,753

ராணிப்பேட்டை - 13,705

திருநெல்வேலி - 13,101

கன்னியாகுமரி - 13,227

விழுப்புரம் - 12,129

தஞ்சாவூர் - 12,394

திருச்சிராப்பள்ளி - 10,919

கள்ளக்குறிச்சி - 9,420

புதுக்கோட்டை - 9,485

திண்டுக்கல் - 9,062

திருப்பூர் - 8,989

தென்காசி - 7,523

திருவாரூர் - 7,842

ஈரோடு - 7,488

ராமநாதபுரம் - 5,629

நாமக்கல் - 6,231

சிவகங்கை - 5,336

நாகப்பட்டினம் - 5,500

திருப்பத்தூர் - 5,379

கிருஷ்ணகிரி - 4,993

நீலகிரி - 4,746

அரியலூர் - 3,926

தருமபுரி - 4,156

கரூர் - 3,294

பெரம்பலூர் - 1,917

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 924

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 968

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: 'வெவ்ஸ் டூ வாட்டர்' பரிசை வென்ற மெட்ராஸ் ஆராய்ச்சியாளரின் சர்வதேச குழு!

Last Updated : Oct 5, 2020, 9:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details