தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்று புதிதாக 3, 086 கரோனா பாதிப்புகள்! தொடர்ந்து குறையும் உயிரிழப்புகள் - கரோனா பாதிப்பு எண்ணிக்கை

Corona status latest
கரோனா பாதிப்பு நிலவரம்

By

Published : Oct 21, 2020, 6:07 PM IST

Updated : Oct 21, 2020, 8:24 PM IST

18:02 October 21

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக இன்று (அக்டோபர் 21) 3 ஆயிரத்து 86 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டில் புதிதாக 80 ஆயிரத்து 348 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 3 ஆயிரத்து 86 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மாநிலத்தில் இதுவரை 89 லட்சத்து 39 ஆயிரத்து 331 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 6 லட்சத்து 97 ஆயிரத்து 116 நபர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 35 ஆயிரத்து 480 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில்  4 ஆயிரத்து 301 நபர்கள் குணமடைந்து இன்று வீட்டுக்கு  திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 50 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனைகளில் 18, அரசு மருத்துமனைகளில் 21 என 39 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 780 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. 

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்:

சென்னை - 1,92,527

செங்கல்பட்டு - 41,845

கோயம்புத்தூர் - 40,690

திருவள்ளூர் - 36,510

காஞ்சிபுரம் - 24,664

சேலம் - 25,649

கடலூர் - 22,719

மதுரை - 18,204

திருவண்ணாமலை - 17,213

வேலூர் - 17,279

தேனி - 16,041

விருதுநகர் - 15,220

ராணிப்பேட்டை - 14,609

தூத்துக்குடி - 14,593

கன்னியாகுமரி - 14,470

தஞ்சாவூர் - 14,715

திருநெல்வேலி - 13,977

விழுப்புரம் - 13,293

திருச்சிராப்பள்ளி - 12,045

திருப்பூர் - 11,558

புதுக்கோட்டை - 10,327

கள்ளக்குறிச்சி - 10,049

திண்டுக்கல் - 9,644

திருவாரூர் - 9,188

ஈரோடு - 9,396

தென்காசி - 7,759

நாமக்கல் - 8,349

நாகப்பட்டினம் - 6,369

ராமநாதபுரம் - 5913

திருப்பத்தூர் - 6,251

சிவகங்கை - 5,715

கிருஷ்ணகிரி - 6,179

நீலகிரி - 6,210

தருமபுரி - 5,331

அரியலூர் - 4,295

கரூர் - 3,859

பெரம்பலூர் - 2,087

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 982

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: 13 ரயில்நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் உயர்வு!

Last Updated : Oct 21, 2020, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details