மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (அக்.14) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு மேலும் ஒரு தனியார் ஆய்வகத்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கி உள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 192ஆக உயர்ந்துள்ளது.
கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 4,462; இறப்பு - 52
18:10 October 14
சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை இன்று (அக்.14) 4 ஆயிரத்து 462 என பதிவாகியுள்ளது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 93 ஆயிரத்து 844 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்து 4 ஆயிரத்து 462 நபர்கள் கரோனா வைரஸ் நோய் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதிலும் இருந்து இதுவரை 83 லட்சத்து 40 ஆயிரத்து 647 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 6 லட்சத்து 70 ஆயிரத்து 392 நபர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருந்தது தெரியவந்தது. இவர்களில் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்த மையங்களில் தற்போது 42 ஆயிரத்து 566 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 5 ஆயிரத்து 83 நபர்கள் குணமடைந்து வீட்டுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 17 ஆயிரத்து 403ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனையில் 21, அரசு மருத்துமனையில் 31 என, 52 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 423ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்:
சென்னை - 1,85,573
செங்கல்பட்டு - 40,148
கோயம்புத்தூர் - 38,315
திருவள்ளூர் - 35,342
காஞ்சிபுரம் - 23,957
சேலம் மா- 24,195
கடலூர் - 22,040
மதுரை - 17,710
திருவண்ணாமலை - 16,788
வேலூர் - 16,615
தேனி - 15,799
விருதுநகர் - 14,973
ராணிப்பேட்டை - 14,287
தூத்துக்குடி - 14,282
கன்னியாகுமரி - 14,009
தஞ்சாவூர் - 14,084
திருநெல்வேலி - 13,680
விழுப்புரம் - 12,792
திருச்சிராப்பள்ளி - 11,568
திருப்பூர் - 10,537
புதுக்கோட்டை - 10,048
கள்ளக்குறிச்சி - 9,789
திண்டுக்கல் - 9,446
திருவாரூர் - 8,703
ஈரோடு - 8,648
தென்காசி - 7,669
நாமக்கல் - 7,565
நாகப்பட்டினம் - 5,997
ராமநாதபுரம் - 5,797
திருப்பத்தூர் - 5,903
சிவகங்கை - 5,557
கிருஷ்ணகிரி - 5,765
நீலகிரி - 5,727
தர்மபுரி - 4,879
அரியலூர் - 4,191
கரூர் - 3,666
பெரம்பலூர் - 2,013
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 982
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர்களை மீட்க ஆறு வகை கருவிகள் - அசத்தும் நாகை மெக்கானிக்!