தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நிலவரம்: பாதிப்பு - 5,980; இறப்பு: 80 - TamilNadu Corona status today

TN corona status today
இன்றைய கரோனா நிலவரம்

By

Published : Aug 22, 2020, 7:08 PM IST

Updated : Aug 22, 2020, 8:54 PM IST

19:06 August 22

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 5 ஆயிரத்து 980 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 22) ஒரே நாளில் 5 ஆயிரத்து 980 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 73 ஆயிரத்து 410ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மேலும் ஆயிரத்து 294 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 71ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கரோனா நோய் தொற்றின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்து 420ஆக உயர்ந்துள்ளது. கரோனா சிகிச்சை முடிந்து, ஒரே நாளில் 5 ஆயிரத்து 603 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். 

இதுவரை 3 லட்சத்து 13 ஆயிரத்து 280 பேர் நோய் தொற்றில் குணமடைந்துள்ளனர். தற்போது 53 ஆயிரத்து 710 பேர் கரோனா சிகிச்சை மையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

மாவட்ட அளவில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம்:

1. அரியலூர் - 48
2. செங்கல்பட்டு - 406
3. சென்னை - 1,294
4. கோயம்புத்தூர் - 389
5. கடலூர் - 309
6. தர்மபுரி - 27
7. திண்டுக்கல் - 129
8. ஈரோடு -117
9. கள்ளக்குரிச்சி - 54
10. காஞ்சிபுரம் - 257
11. கன்னியாகுமரி -108
12. கருர் - 40
13. கிருஷ்ணகிரி - 30
14. மதுரை - 96
15. நாகப்பட்டினம் - 81
16. நாமக்கல் - 42
17. தென்காசி - 137
18. ராமநாதபுரம் - 40
19. நீலகிரி - 32
20. தேனி - 144
21. திருபத்தூர் - 74
22. திருவள்ளூர் - 384
23. திருவண்ணாமலை - 87
24. திருவாரூர் - 75
25. தூத்துக்குடி - 120
26. திருநெல்வேலி - 140
27. திருப்பூர் - 70
28. திருச்சி -120
29. வேலூர் - 244
30. விழுப்புரம் - 133
31. விருதுநகர் - 39
32. பெரம்பலூர்- 6
33. ராணிப்பேட்டை - 93
34. சேலம் - 288
35. சிவகங்கை - 60
36, தஞ்சாவூர் - 109
37. புதுக்கோட்டை - 154
38. விமான நிலைய கண்காணிப்பு (சர்வதேச) - 5
 

இன்று மொத்தம் கரோனா பாதிப்பு எண்ணிக்கை - 5,980

இதையும் படிங்க:கரோனா பாதிப்பு: நுரையீரல் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

Last Updated : Aug 22, 2020, 8:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details