மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள கரோனா வைரஸ் குறித்த தகவலில், தமிழ்நாட்டில் உள்ள 68 ஆய்வகங்களில் 10, 289 நபர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் 646 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 592 பேர் தமிழ்நாட்டில் இருந்தவர்கள் எனவும், மகாராஷ்டிராவில் இருந்துவந்த 35 பேர், குஜராத்தில் இருந்து வந்த 6 பேர், தெலங்கானாவில் இருந்து வந்த 3 பேர், டெல்லி, உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்த இரண்டு பேர், கேரளாவிலிருந்து வந்த ஒருவர், துபாயில் இருந்து வந்த 5 பேர் என 646 பேருக்கு தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
மருத்துவமனைகளில் தற்பொழுது 8,256 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 611 பேர் பூரண குணமடைந்து இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று நலம் அடைந்த 9,342 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்று அறிகுறியுடன் உள்ள 5,906 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நோயாளிகளில் 9 பேர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தனர். மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 127ஆக உள்ளது.
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 80 வயது முதியவர், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்ற 57 வயது முதியவர், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 45 வயது பெண், 55 வயது பெண், 70 வயது பெண், 75 வயது முதியவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 53 வயது பெண், 65 வயது முதியவர், 76 வயது ஆண் ஆகியோர் பல்வேறு நோய்கள் காரணமாக உயிரிழந்தனர்.
மாவட்டம் வாரியாக பாதிப்பு:
- சென்னை -11,640
- செங்கல்பட்டு -857
- திருவள்ளூர் -788
- கடலூர் -436
- அரியலூர் -357
- விழுப்புரம் -322
- காஞ்சிபுரம் -316
- திருநெல்வேலி -292
- மதுரை -233
- திருவண்ணாமலை -243
- தூத்துக்குடி -187
- கோயம்புத்தூர் -146
- கள்ளக்குறிச்சி -153
- பெரம்பலூர் -139
- திண்டுக்கல் -134
- விருதுநகர் -116
- திருப்பூர் -112
- தேனி -108
- ராணிப்பேட்டை -96
- தஞ்சாவூர் -84
- தென்காசி -83
- கரூர் -80
- நாமக்கல் -76
- திருச்சிராப்பள்ளி -76
- ஈரோடு -71
- ராமநாதபுரம் -64
- சேலம் -68
- கன்னியாகுமரி -58
- நாகப்பட்டினம் -51
- வேலூர் -40
- திருவாரூர் -38
- திருப்பத்தூர் -31
- சிவகங்கை -29
- கிருஷ்ணகிரி -25
- புதுக்கோட்டை -20
- நீலகிரி -13
- தருமபுரி -8
விமான நிலையத்தில் உள்ள தனிமை முகாமில் இருந்த 86 பேருக்கும், ரயில் மூலம் வந்தவர்களுக்கான தனிமை முகாமில் இருந்து 36 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானங்கள் மூலம் மே 25, 26 ஆகிய தேதிகளில் 840 பேர் சென்னைக்கு வந்துள்ளனர்.