தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் இன்று ஆயிரத்தை தொட்ட கரோனா! - chennai district news today

சென்னை: தமிழ்நாட்டில் நான்காவது நாளாக இன்று கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

corona
corona

By

Published : Jun 3, 2020, 8:32 PM IST

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் என மொத்தம் 73 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. 14 ஆயிரத்து 101 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், ஆயிரத்து 286 பேருக்கு நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் வசித்து வந்த ஆயிரத்து 244 நபர்களும், விமானங்களின் மூலம் அமெரிக்காவிலிருந்து வந்த 2 பேர், துபாயிலிருந்து வந்த 13 பேர், குஜராத்தில் இருந்து வந்த 3 பேர், கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, ரயில்களில் வந்தவர்களில் டெல்லியில் இருந்து வந்த 5 பேர், கர்நாடகாவிலிருந்து வந்த 2 பேர், மகாராஷ்டிராவிலிருந்து வந்த 16 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 872ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 11 ஆயிரத்து 345 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த 610 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை, 14 ஆயிரத்து 208 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி 11 பேர் இன்று உயிரிழந்தனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 66 வயது முதியவர், 75 வயது முதியவர், 63 வயது முதியவர், 50 வயது ஆண் ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 47 வயது ஆண், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 70 வயது பெண்மணி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 60 முதியவர், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 58 வயது பெண்மணி ஆகிய நான்கு பேரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்" என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக கரோனா பாதிப்பு:

வரிசை எண் மாவட்டங்கள் கரோனா பாதிப்பு
1 சென்னை 17,598
2 செங்கல்பட்டு 1,370
3 திருவள்ளூர் 1,087
4 திருவண்ணாமலை 465
5 கடலூர் 468
6 காஞ்சிபுரம் 453
7 திருநெல்வேலி 378
8 அரியலூர் 370
9 விழுப்புரம் 349
10 தூத்துக்குடி 294
11 மதுரை 276
12 கள்ளக்குறிச்சி 254
13 சேலம் 207
14 கோயம்புத்தூர் 161
15 திண்டுக்கல் 147
16 பெரம்பலூர் 142
17 விருதுநகர் 128
18 திருப்பூர் 114
19 தேனி 116
20 ராணிப்பேட்டை 105
21 தஞ்சாவூர் 103
22 தென்காசி 94
23 திருச்சி 93
24 ராமநாதபுரம் 90
25 நாமக்கல் 82
26 கரூர் 82
27 ஈரோடு 72
28 கன்னியாகுமரி 76
29 நாகப்பட்டினம் 64
30 திருவாரூர் 51
31 வேலூர் 51
32 சிவகங்கை 33
33 திருப்பத்தூர் 40
34 கிருஷ்ணகிரி 28
35 புதுக்கோட்டை 27
36 நீலகிரி 14
37 தருமபுரி 9

ரயில் மற்றும் விமானங்களின் மூலம் வந்த ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 486 நபர்களில், ஆயிரத்து 724 பேர் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று ரயில்களின் மூலம் தமிழ்நாட்டிற்கு திரும்பிய 10 ஆயிரத்து 270 பேரில் 9 ஆயிரத்து 650 நபர்களுக்கு சளி பரிசோதனை மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. 35 பேரின் மாதிரிகள் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 9 ஆயிரத்து 368 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 245 பேர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு விமானங்கள் மூலம் வந்த 27 பேருக்கு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details