தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே 25) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 284 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்து 34 ஆயிரத்து 280 நபர்களுக்கும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஐந்து நபர்களுக்கும் என 34 ஆயிரத்து 285 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக கரோனாவில் இருந்து மீண்ட 28,745 பேர் - கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
19:08 May 25
சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மே 25) புதிதாக 28 ஆயிரத்து 745 நபர்கள் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 60 லட்சத்து 76 ஆயிரத்து 131 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதன் மூலம் 19 லட்சத்து 11 ஆயிரத்து 496 நபர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 652 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் இன்று (மே 25) 28 ஆயிரத்து 745 நபர்கள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 83 ஆயிரத்து 504 என உயர்ந்துள்ளது.
மேலும் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் சிகிச்சைப் பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனையில் 178 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 290 நோயாளிகளும் என 468 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 340 என உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,041 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், கோயம்புத்தூரில் ஒரே நாளில் 3,632 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
சென்னை - 4,87,691
செங்கல்பட்டு - 1,32,492
கோயம்புத்தூர் - 1,46,805
திருவள்ளூர் - 95,136
சேலம் - 58,850
காஞ்சிபுரம் - 59,200
மதுரை - 58,536
கடலூர் - 44,863
திருச்சி - 49,158
திருப்பூர் - 50,554
தூத்துக்குடி - 43,844
திருநெல்வேலி - 40,763
வேலூர் - 39,609
தஞ்சாவூர் - 42,151
ஈரோடு - 46,366
கன்னியாகுமரி - 42,971
திருவண்ணாமலை - 37,578
தேனி - 33,116
ராணிப்பேட்டை - 31,611
விருதுநகர் - 32,828
விழுப்புரம் - 30,394
கிருஷ்ணகிரி - 29,671
நாமக்கல் - 27,092
திண்டுக்கல் - 24,734
திருவாரூர் - 26,205
நாகப்பட்டினம் - 24,711
புதுக்கோட்டை - 20,717
கள்ளக்குறிச்சி - 18,973
தென்காசி - 20,185
திருப்பத்தூர் - 20,163
நீலகிரி - 16,126
தர்மபுரி - 16,591
ராமநாதபுரம் - 15,057
கரூர் - 14,459
சிவகங்கை - 13,198
அரியலூர் - 9,790
பெரம்பலூர் - 6,801
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,004
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075
ரயில் மூலம் வந்தவர்கள் - 428