இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரத் தகவல்களின்படி, தமிழ்நாட்டில் ரேபிட் பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. புதிதாக 70 ஆயிரத்து 153 நபர்களுக்கு சளி பரிசோதனை 134 ஆய்வகத்தின் மூலமாக செய்யப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் இருந்த 5 ஆயிரத்து 862 நபர்களுக்கும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 28 நபர்களுக்கும் என, 5 ஆயிரத்து 890 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 5,890; உயிரிழப்பு - 117
18:14 August 14
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 5 ஆயிரத்து 790 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று (ஆகஸ்ட்.14) ஒரே நாளில் 70 ஆயிரத்து 153 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இதுவரை 35 லட்சத்து 69 ஆயிரத்து 453 பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவற்றின் மூலம் 3 லட்சத்து 26 ஆயிரத்து 245 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில், தற்போது 53 ஆயிரத்து 716 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில், 5 ஆயிரத்து 556 பேர் பூரண குணமடைந்து இன்று(ஆக.14) ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் வைரஸ் தொற்று பாதிப்படைந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 15ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், சிகிச்சை பலனின்றி 117 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 514ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாள்களாக ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை, இன்று மீண்டும் அதிகரித்து ஆயிரத்து 187 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 25 நபர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு விவரம்:
சென்னை - 1,14,260
செங்கல்பட்டு - 20,080
திருவள்ளூர் - 18,958
காஞ்சிபுரம் - 13,409
மதுரை - 12,561
விருதுநகர் - 10,938
தூத்துக்குடி - 9,790
தேனி - 9,489
திருவண்ணாமலை - 8,514
வேலூர் - 8,078
ராணிப்பேட்டை - 7,963
கோயம்புத்தூர் - 8,274
திருநெல்வேலி - 7,229
கன்னியாகுமரி - 7,178
திருச்சிராப்பள்ளி - 5,654
கடலூர் - 6,165
சேலம் - 5,537
விழுப்புரம் - 5,033
கள்ளக்குறிச்சி - 4,776
தஞ்சாவூர் - 4,652
திண்டுக்கல் - 4,524
ராமநாதபுரம் - 3,898
புதுக்கோட்டை - 3,818
தென்காசி - 3,725
சிவகங்கை - 3,271
திருவாரூர் - 2,202
திருப்பத்தூர் - 1,932
கிருஷ்ணகிரி - 1,552
அரியலூர் - 1,642
நாகப்பட்டினம் - 1,422
திருப்பூர் - 1,431
ஈரோடு - 1,334
நாமக்கல் - 1,144
நீலகிரி - 1,010
தருமபுரி - 969
கரூர் - 939
பெரம்பலூர் - 863
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 868
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 735
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சம் - சென்னை மாநகராட்சி ஆணையர்