தமிழ்நாட்டில் இதுவரை 3,32,105 பேர் கரோனா தொற்றால் பாதிப்பு...! - chennai news
18:08 August 15
தமிழ்நாட்டில் இதுவரை 3,32,105 பேர் கரோனா தொற்றால் பாதிப்பு..!
தமிழ்நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 15) மட்டும் தமிழ்நாட்டில் 5,994 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,32,105ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பால் இன்று அதிகப்படியாக 127 பேர் உயிரிழந்தனர்.
இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,641ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 5,326 பேர் குணமடைந்து வீடு திரும்பியதன் மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,72,251ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,179 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோரின் விவரம் :
- அரியலூர் - 1715
- செங்கல்பட்டு - 20465
- சென்னை - 115444
- கோவை - 8569
- கடலூர் - 6505
- தருமபுரி - 987
- திண்டுக்கல் - 4645
- ஈரோடு - 1349
- கள்ளக்குறிச்சி - 4857
- காஞ்சிபுரம் - 13576
- கன்னியாகுமரி - 7359
- கரூர் - 982
- கிருஷ்ணகிரி - 1611
- மதுரை - 12643
- நாகப்பட்டினம் - 1504
- நாமக்கல் - 1181
- நீலகிரி - 1033
- பெரம்பலூர் - 889
- புதுக்கோட்டை - 3990
- ராமநாதபுரம் - 3957
- ராணிப்பேட்டை - 8217
- சேலம் - 5737
- சிவகங்கை - 3320
- தென்காசி - 3814
- தஞ்சாவூர் - 476
- தேனி - 9703
- திருப்பத்தூர் - 1998
- திருவள்ளூர் - 1938
- திருவண்ணாமலை - 8622
- திருவாரூர் - 2254
- தூத்துக்குடி - 9869
- திருநெல்வேலி - 7398
- திருப்பூர் - 1495
- திருச்சி - 5762
- வேலூர் - 8236
- விழுப்புரம் - 5117
- விருதுநகர் - 11107
கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம் :
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 874
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 747
- ரயில் மூலம் வந்தவர்கள்: 428