இன்றைய கரோனா பாதிப்பு விவரத்தை தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மேலும் 5 ஆயிரத்து 914 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 5 ஆயிரத்து 879 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 35 பேர் வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். தற்போது தமிழ்நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3லட்சத்து 3 லட்சத்து 2 ஆயிரத்து 815ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 976 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 121ஆக அதிகரித்துள்ளது. இன்று அதிகபட்சமாக 114 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதில், அரசு மருத்துவமனையில் 80 பேரும், தனியார் மருத்துவமனையில் 34 பேரும் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 41ஆக அதிகரித்துள்ளது. இன்று, 6 ஆயிரத்து 37 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 44 ஆயிரத்து 675ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைந்தோரின் எண்ணிக்கை சில நாள்களாக அதிகரித்துவருகிறது. அதே நேரத்தில் மருத்துவமனைகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை இன்று 25 நபர்களாக உள்ளது. இன்று மட்டும் 65 ஆயிரத்து 141 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. மாநிலத்தில் இதுவரை 31 லட்சத்து 74 ஆயிரத்து 849 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.