தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் - மு.க. ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு என்று பெயரிடப்பட ஜூலை 18ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

v
v

By

Published : Oct 30, 2021, 12:39 PM IST

Updated : Oct 30, 2021, 12:44 PM IST

எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு நேர்வாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன.

2019 முதல் நவம்பர் 1ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலதரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவு கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்று கூறினர்.

மேலும் மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணா அவர்களால் 1967ஆம் ஆண்டு சூலை - 18 - ஆம் நாள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் நவம்பர் 1 ஆம் நாளை எல்லைப்போராட்டத் தியாகிகளை கெளரவிக்கும் வகையில் 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைச்சென்ற தியாகிகளை தமிழ்நாடு அரசு போற்றி சிறப்பித்து வருகிறது.

தற்போது எல்லைக்காவலர்கள் மொத்தம் சுமார் 110 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகையாக ரூ.5500, மருத்துவப்படியாக ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் எல்லைக்காவலர்களின் மரபுரிமையர்கள் 137 பேருக்கு மாதம் தோறும் உதவித்தொகையாக ரூ.3000, மருத்துவப்படியாக ரூ.500 வழங்கப்பட்டு வருகிறது.

எல்லைப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறைசென்று தியாகம்செய்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக்காவலர்கள் 110 பேருக்கு சிறப்பு நேர்வாக வரும் நவம்பர் 1ஆம் நாள் தலா ரூபாய் 1 லட்சம் வீதம் பொற்கிழி வழங்கி கெளரவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் - கேரள முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

Last Updated : Oct 30, 2021, 12:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details