தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கீழடி விசைப்பலகை, தமிழி-தமிழிணையம் ஒருங்குறிமாற்றி, இ-முன்னேற்றம், தகவல் தொழில்நுட்ப நண்பன் உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.22) தொடங்கி வைத்தார்.
கீழடி கண்டுபிடிப்புகளை டிஜிட்டல் முறையில் தெரிந்து கொள்ளும் திட்டம் இந்த கீழடி விசைப்பலகை திட்டத்தின் மூலம் கீழடியில் தொல்லியல் ஆய்வின் மூலம் கிடைக்கப் பெற்ற தொன்மை வாய்ந்த கண்டுபிடிப்புகளை டிஜிட்டல் முறையில் தெரிந்து கொள்ளலாம்.
இ - முன்னேற்றம், தகவல் தொழில்நுட்ப நண்பன் திட்டங்களைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் மேலும், முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மீளாய்வு செய்ய உதவும் வகையில் இ-முன்னேற்றம் திட்டமும், தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையிலும், தொழில்நுட்பத் துறையின் புதிய கண்டுபிடிப்புகள் அறிந்து கொள்ளவும் ’ஐடி நண்பன்’ திட்டமும் உதவும்.
முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்கள் தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக இத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்த நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பவியல் செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:ஜெயலலிதா கார் ஓட்டுநர் மரண வழக்கு - மீண்டும் விசாரணை தொடக்கம்!