தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன்முறையாகப்பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின், சென்ற 100 நாள்களில் மக்களைத் தேடி மருத்துவம், கரோனா நடவடிக்கைகள், நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
இந்நிலையில், தன் அன்றாடப் பணிகளுக்கு இடையில் உடல் ஆரோக்கியத்தையும் வழக்கம்போல் அவர் பேணிக்காத்து வருகிறார். எப்போதும் போலவே உடற்பயிற்சி செய்வதையும், சைக்கிளிங் செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார் ஸ்டாலின்.
அந்த வகையில், இன்று (ஆக. 21) காலை ஜிம்மில் ஸ்டாலின் வொர்க்-அவட் செய்யும் காணொலி வெளியாகி வைரலாகியுள்ளது. தனது 68ஆவது வயதிலும் உடற்பயிற்சியை விடாமல் செய்துவரும் ஸ்டாலினின் மன உறுதி இளந்தலைமுறையினருக்கு உத்வேகமாக விளங்குகிறது.