தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக சொன்னதை செய்யும் - முதலமைச்சர் ஸ்டாலின்

தேர்தல் அறிக்கையில் கொடுத்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

cm Stalin
cm Stalin

By

Published : Sep 27, 2021, 1:16 PM IST

தென்னிந்திய திருச்சபையின் பவளவிழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பவள விழா நிகழ்வுகளை தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் கருவூலம்

இந்த நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, "ஒற்றுமை சகோதரத்துவம் அனைவரும் சமம் ஆகிய உன்னத நோக்கை நிறைவேற்றும் தென்னிந்திய திருச்சபைக்கு இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.

திறந்த உலகின் சிறந்த திருசபையாக தென்னிந்திய திருசபை திகழ்கிறது. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை உருவாக்கி அனைவருக்கும் கல்வி என்னும் இலக்கை நிறைவேற்றி வரும் இந்த திருச்சபை இந்தியாவின் கருவூலம்.

சொல்வதை செய்வோம்

இன்று தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அரசு உங்களால் உருவான அரசு. தேர்தல் நேரத்தில் போட்டியிடும் கட்சிகள் வாக்குறுதிகளை வழங்குவது வழக்கம் ஆனால் திமுகவை பொறுத்தவரையில் சொன்னதை செய்வோம், சொல்வதை செய்வோம். தேர்தல் அறிக்கையில் கொடுத்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்" என்றார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் கீதாஜீவன், சேகர்பாபு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் இனிக்கோ இருதயராஜ், மருத்துவர் எழிலன், திருச்சபையின் பிரதம போராயர் தர்மராஜ் ரசாலம், துணை பிரதம பேராயர் ரூபன் மார்க், திருச்சபையின் பொது செயலாளர் பெர்னாண்டஸ் ரத்னராஜா, பொருளாளர் விமல்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

தென்னிந்திய திருச்சபை கடந்த 1947ஆம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களை உள்ளடக்கி, 24 பேராயர்களும், 40 லட்சம் நேரடி உறுப்பினர்களை கொண்டு தென்னிந்திய திருச்சபை செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ‘மக்களை தேடி செல்லும் அரசு திமுக’ - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details