மதுரை:இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரை காமராஜபுரம் பாரதியார் தெருவைச் சேர்ந்த யோ. முத்துலட்சுமியின் கணவர் யோகேஸ்வரன். கடந்த 13ஆம் தேதி அழகர்கோவில் சாலை கள்ளந்திரியில் உள்ள முல்லைப் பெரியாறு கால்வாயில் எதிர்பாராதவிதமாக மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு வருத்தமுற்றேன்.
கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு - மதுரை செய்திகள்
மதுரை அருகே கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உயிரிழந்த யோகேஸ்வரனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Atom Expo : சர்வதேச அணுசக்தி கண்காட்சி... இந்தியர்கள் பங்கேற்பு