தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீரர்களின் சிலைகளுக்கு மரியாதை -முதலமைச்சர் அறிவுறுத்தல்

சுதந்திர தினத்தில் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள், வீரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

freedom fighters  statue of freedom fighters  tn cm order  tn cm order to respect statue of freedom fighters  chennai news  chennai latest news  வீரைகளின் சிலைகளுக்கு மறியாதை  தமிழ்நாடு முதல்மைச்சர் உத்தரவு  வீரைகளின் சிலைகளுக்கு மறியாதை செலுத்த ஸ்டாலின் உத்தரவு  விடுதலை வீரர்கள்  சிலை  ஸ்டாலின் உத்தரவு  முதலமைச்சர் ஸ்டாலின்
ஸ்டாலின் உத்தரவு

By

Published : Aug 14, 2021, 1:30 AM IST

சென்னை:இந்தியவின் விடுதலைக்காக போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில், அவர்களுக்கு நகரின் முக்கிய பகுதிகளில் சிலைகளும், நினைவு மண்டபங்களும் அமைக்கப்பட்டு, அவை முறையாக பராமரிக்கப்பட்டும் வருகின்றன.

அப்பெருமக்களின் பிறந்தநாள், நினைவு நாள்களானது செய்தித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, கலைப் பண்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் வாயிலாக அரசு விழாவாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றன.

சிலைகளுக்கு மாலை

இவ்விழாக்களில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்ககள், மக்கள் பிரதிநிதிகள், உயர் அலுவலர்கள், தலைவர்களின் வாரிசுகள் பங்கேற்று மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திடும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

நூறாண்டு கடந்த தலைவர்களின் தியாகங்களை, அருமை பெருமைகளை இன்றைய இளம் தலைமுறையினரும் அறிந்து கொள்ளுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் நூற்றாண்டு விழாக்களும் சிறப்புடன் கொண்டாடப்பட்டும் வருகின்றன.

அதேபோல, நம்நாடு விடுதலை பெற தன்னை அர்ப்பணித்ததோடு தமது இன்னுயிரையும் தந்திட்ட பெருந்தலைவர்களுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், சுதந்திர தினத்தின் போது வீரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட் 2021: நீதி மேலாண்மை!

ABOUT THE AUTHOR

...view details