தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுஜித் மீட்புப் பணிகள் குறித்து பிரதமரிடம் விளக்கினேன் - எடப்பாடி பழனிசாமி - Sujith rescue operations

சென்னை: சுஜித்தின் மீட்புப் பணிகள் குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கியுள்ளேன் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Palanisamy

By

Published : Oct 28, 2019, 6:40 PM IST

திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 72 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டுவரும் பணி 24 மணி நேரத்தைக் கடந்து நடைபெற்றுவருகிறது.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "சுஜித்தின் மீட்புப் பணிகள் குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கினேன். தீயணைப்புத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம், மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் ஆகியவை மீட்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றன.

Palanisamy tweet

மீட்புப் பணிகளை மூன்று அமைச்சர்கள் பார்வையிட்டுவருகின்றனர்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'சுஜித்தை உயிருடன் மீட்கும் பணிகள் தீவிரம்' - பிரதமர் நரேந்திர மோடி

ABOUT THE AUTHOR

...view details