சென்னை:மணிப்பூரில் உள்ள மலைவாழ் மக்களுக்கான இடஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக இருவேறு சமூகத்தினரிடையே வன்முறை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நிகழ்ந்து வருகிறது. அந்த விவகாரத்தில் குக்கி என்ற மலை கிராம மக்களை தாக்குவது, தீயிட்டு எரிப்பது போன்ற வன்முறை அறங்கேறியது. அது மட்டுமின்றி பெண்களை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கி, அதை இணையத்தில் வெளியிட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிடக் கோரி மணிப்பூர் மாநில முதலமைச்சர் என்.பைரேன் சிங்கிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று (31.7.2023) கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில், மணிப்பூரில் உள்ள தமிழர்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உயிருக்கும் உடமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமாறு தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டு உள்ளார். தற்போதைய சூழ்நிலையின் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்து வருவதாகவும் தனது கவனத்திற்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
இதையும் படிங்க:அம்பேத்கரும் - காந்தியும்.. நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க கூடாதா? - சட்ட வல்லுநர்கள் கூறுவது என்ன?