தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வந்தாரை வாழவைக்கும் சென்னை'- முதலமைச்சர் வாழ்த்து - chennai district news

382 ஆவது சென்னை தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துப் பதிவு வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் வாழ்த்து
முதலமைச்சர் வாழ்த்து

By

Published : Aug 22, 2021, 10:44 AM IST

உலகின் 31ஆவது பெரிய நகரம், இந்தியாவின் நான்காவது பெரிய நகரம் என்ற சிறப்பை பெற்றுள்ளது சென்னை. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி இந்தாண்டு சென்னை மாநகரம் இன்று தனது 382ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை நாளை கொண்டாட பல நிகழ்ச்சிகள் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் 382ஆவது சென்னை நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துப் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "சீர்மிகு, சிங்கார - வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது.

தொலைநோக்கு பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்கு பங்களித்தது திமுக அரசு; இனியும் தொடரும். சென்னை மாநகர மக்களுக்கு #MadrasDay வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மெட்ராஸின் வரலாறு 380 ஆண்டா? ஈராயிரம் ஆண்டா?

ABOUT THE AUTHOR

...view details