தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்வித் தொலைக்காட்சியில் வகுப்புகளைத் தொடங்கிவைத்த முதலமைச்சர் - kalvi tv

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கும் நிகழ்வையும், கல்வித் தொலைக்காட்சியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோக்கள் ஒளிபரப்பு சேவையையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

kalvi TV
கல்வி தொலைகாட்சி

By

Published : Jun 19, 2021, 12:33 PM IST

Updated : Jun 19, 2021, 1:14 PM IST

சென்னை: கரோனா பரவல் காரணமாகத் தமிழ்நாட்டில் கடந்தாண்டு மார்ச் மாதம்முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி மூலமாகப் பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

கல்வி தொலைக்காட்சி தொடக்கம்

இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் கல்வித் தொலைக்காட்சியில் நடப்பாண்டிற்கான 2ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான புதிய பாடங்கள் அடங்கிய வீடியோக்களை ஒளிபரப்பு செய்யும் சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வித் தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் இன்று (ஜூன் 19) தொடங்கிவைத்தார்.

கல்வி தொலைகாட்சியில் வகுப்புகளை தொடங்கி வைத்த முதலமைச்சர்

மேலும், விலையில்லா பாடநூல்கள் புத்தகத்தை 5️ அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி அத்திட்டத்தையும் தொடங்கிவைத்தார்.

மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள்

இதையும் படிங்க:ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளா? ஸ்டாலின் இன்று ஆலோசனை

Last Updated : Jun 19, 2021, 1:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details