சென்னை: காவிரியில் கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் திறக்கப்படாதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023 ஜூன் 03ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் தொடர்ந்து திறக்காத காரணத்தால், மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்கு போதிய அளவு தண்ணீர் திறந்து விட இயலாத நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வாடிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.