தமிழ்நாட்டில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் - முதலமைச்சர் ஆலோசனை - Distribution of essential commodities
சென்னை: பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
முதலமைச்சர்
இந்தக் கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வேளாண்மைத்துறைச் செயலாளர் கோபால் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் முக்கிய அலுவலர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு இருப்பதால், பொது விநியோக திட்டம் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஆய்வு செய்தார்.