தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக முதலீட்டாளர்கள் மாநாடு; முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை! - தலைமைச் செயலகம்

Global Investors Meet: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வருகிற 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாடு குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

tn cm stalin consult about global investors meet
உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 3:44 PM IST

சென்னை:சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வருகின்ற 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில், அதிக அளவு முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்களும் பெறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மாநாடு தொடர்பாக அரசு நிர்ணயித்துள்ள இலக்கினை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். அதில், "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றிடும் விதமாக, 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலருக்கு உயர்த்த வேண்டும் என்ற ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. மேலும், இந்த நோக்கத்திற்காக தொழில்துறை பல்வேறு முதலீட்டு மாநாடுகளை நடத்தி வருகிறது" என குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:தெலங்கானா முன்னாள் முதலமைச்சரை சந்தித்து நலம் விசாரித்த ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி..!

இந்நிலையில், வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளி நாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருப்பதாகவும், மேலும் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டையொட்டி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான பல்வேறு பணிகளை தற்போது தமிழகத் தொழில் துறை செய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.04) ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா மற்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:“புதுவை பஜார் செயலி”.. வர்த்தக சவால்களை எதிர்கொள்ள புதுச்சேரி வணிகர்களின் புது முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details