தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பயணித்த மஹிந்திரா தார் வாகனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் பயன்படுத்தும் வாகனங்கள் குறித்த ஆர்வம் சமூக வலைதளவாசிகளை பற்றிக்கொண்டது. அது குறித்த தேடலும் நீண்டது. அந்தவகையில் முதலமைச்சர் பயணங்களின்போது பயன்படுத்தும் வாகனங்கள் குறித்து இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு டொயோட்டோ பிராடோ காரை முதலமைச்சர் பயன்படுத்தினார். சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டபோதும், குடும்ப நிகழ்வின்போது மு.க.ஸ்டாலின் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்பிரின்டர் வேனை பயன்படுத்துகிறார்.