தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாநிதிக்கு நினைவிடம் - ஸ்டாலின் அறிவிப்பு - TN CM MK Stalin announces

கருணாநிதிக்கு
கருணாநிதிக்கு

By

Published : Aug 24, 2021, 10:20 AM IST

Updated : Aug 24, 2021, 12:07 PM IST

12:05 August 24

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 24) அறிவித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. நிதிநிலை அறிக்கைகள் மீதான பொது விவாதம் நடைபெற்ற நிலையில், தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. அதன்படி, இன்று உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. 

இதற்கு துறையின் அமைச்சர்கள் கே.என். நேரு, பெரிய கருப்பன் ஆகியோர் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

11:34 August 24

அரை நூற்றாண்டாக நிரந்தர தலைப்புச் செய்தியாக இருந்தவர் கருணாநிதி

அரை நூற்றாண்டாக நிரந்தர தலைப்புச் செய்தியாக இருந்தவர் கருணாநிதி

அனைத்துத் துறைகளும் ஒருசேர வளர்ந்தது,

  • செம்மொழித் தகுதி இட ஒதுக்கீடு,
  • அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்,
  • சொத்தில் மகளிருக்குச் சம உரிமை,
  • பிற்படுத்தப்பட்டோர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களுக்குச் சமூகநீதி உரிமை,
  • உழவருக்கு இலவச மின்சாரம்,
  • கூட்டுறவு வங்கியில் 7000 கோடி ரூபாய் கடன்,
  • 10 மெட்ரோ ரயில் திட்டம்,
  • சென்னைக்கு சிப்காட் சிட்கோ தொழில் வளாகங்கள் உருவாக்கியது,
  • தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்,
  • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,
  • நமக்கு நாமே திட்டம்,
  • அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்,
  • 108 ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்,
  • இலவச மருத்துவக் காப்பீடு,
  • சிற்றுந்து கொண்டுவந்தது,
  • உழவர் சந்தைகள் அமைத்தது,
  • கைம்பெண்கள் மறுமணம்,
  • கர்ப்பிணிகளுக்கு உதவி,
  • பல்லாயிரம் கோயில்களுக்குத் திருப்பணி,
  • அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு,
  • உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு,
  • இலவச எரிவாயு இணைப்புடன்கூடிய எரிவாயு அடுப்பு,
  • மகளிர் சுய உதவிக்குழு,
  • அனைவரும் இணைந்து வாழ சமத்துவபுரம்,
  • இஸ்லாமியர்களுக்கு 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு,
  • உருது பேசும் இஸ்லாமியர்களுக்கு பிசி பட்டியலில் இணைத்தது,
  • நுழைவுத்தேர்வு ரத்து,
  • மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கியது,
  • சேலம் உருக்காலை,
  • சேலம் புதிய ரயில்வே மண்டலம்,
  • நெமிலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்,
  • ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்,
  • ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம்,
  • தெற்காசியாவிலேயே மிகப்பெரிய அளவிற்கு அண்ணா நூற்றாண்டு நூலகம்,
  • மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகளுக்கு மறுவாழ்வு,
  • ஏராளமான கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள்

10:16 August 24

'ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு எடுக்கிறார்'

கருணாநிதிக்கு நினைவிடம் - ஸ்டாலின் அறிவிப்பு

இப்படி நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. திருக்குவளை என்ற குக்கிராமத்திலிருந்து கிளம்பிய இளைஞனுக்கு தமிழ்நாட்டை எப்படி வடிவமைக்க வேண்டும் என்ற ஒரு கனவு இருந்தது; தொலைநோக்குப் பார்வை இருந்தது. திருவள்ளுவர், பெரியார், அண்ணா ஆகிய மூவரும் அவருக்கு மூச்சுக் காற்றாக இருந்து செயல்படுத்தியவர் என்ற அவரது கனவை நிறைவேற்றும் மாமனிதராக கருணாநிதி செயல்பட்டார்.

அவரது சிறப்புச் சித்திரங்களுக்குச் சான்றாக வள்ளுவர் கோட்டமும், குமரியில் 133 அடி வள்ளுவர் சிலையும் எழுந்திருக்கின்றன. தன்னை வசைபாடியவர்களையும் வாழ்த்தியவர் கருணாநிதி. இப்படி அரை நூற்றாண்டாக நிரந்தர தலைப்புச் செய்தியாக இருந்தவர் கருணாநிதி.  

40 ஆண்டுகளுக்கு முன்பே தனது கல்லறையில் 'ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு எடுக்கிறார்' என்ற வாசகத்தை பொறிக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தன்னை தந்து தாய் நாட்டை உருவாக்கிய கருணாநிதியைப் போற்றும்விதமாக அவரது சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்கால தலைமுறைகளும் அறியும் வகையில் நவீன விளக்குகளுடன் சென்னை காமராஜர் சாலை நினைவிட வளாகத்தில் 2.1 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணாமலையாரை தரிசித்த துர்கா ஸ்டாலின்

Last Updated : Aug 24, 2021, 12:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details